Corona Virus

கொரோனா அச்சத்தால் பாதிப்பு : FEFSI தொழிலாளர்களுக்கு நடிகர் சூர்யா குடும்பத்தினர் நிதியுதவி!

கொரோனாவால் சினிமா பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர் சூர்யா குடும்பத்தினர் நிதியுதவி செய்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் தற்போது உலகின் 160க்கும் மேலான நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது. இதனால் உலகளவில் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவையும் இந்த ஆட்கொல்லி வைரஸ் விட்டுவைக்கவில்லை. இதுவரை கொரோனாவால் இந்தியாவில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியதும் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்தாகிவிட்டது.

கொரோனா அச்சத்தால் பாதிப்பு : FEFSI  தொழிலாளர்களுக்கு நடிகர் சூர்யா குடும்பத்தினர் நிதியுதவி!

இதனால் இந்தியா முழுவதும் உள்ள திரைத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலையில்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களின் நலனுக்காக உதவுமாறு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் (FEFSI) ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஃபெப்சியில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். அதில், நாள்தோறும் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அத்தனை பேரின் குடும்பத்தினருக்கும் ஒரு மூட்டை அரிசி கொடுப்பதாக இருந்தால் கூட 2 கோடி ரூபாய் ஆகும்.

கொரோனா அச்சத்தால் பாதிப்பு : FEFSI  தொழிலாளர்களுக்கு நடிகர் சூர்யா குடும்பத்தினர் நிதியுதவி!

எனவே, கருணை உள்ளம் கொண்டவர்கள் அவர்களுக்கு உதவுமாறு ஆர்.கே.செல்வமணி கேட்டிருந்தார். இதனையடுத்து, நடிகர் சிவக்குமாரும் அவரது மகன்களான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய மூவரும் இணைந்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களின் நலனுக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories