Corona Virus

”வியாபாரம் இல்லைதான்; ஆனால், கொரோனாவுக்கு இது பரவாயில்லை” : நெகிழ வைத்த பூ விற்கும் பெண்மணியின் பேச்சு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது தொடர்பாக பூ வியாபாரம் செய்யும் பெண்மணி பேசிய வீடியோ இணையத்தில் பாராட்டை பெற்று வருகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனா, இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. இதனால் மக்கள் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை இந்தியாவில் 298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 உயிர்கள் பலியான நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களிடம் மேலும் மேலோங்கியுள்ளது. முதியோருக்கும், குழந்தைகளுக்கு மட்டும்தான் இந்த கொரோனா வைரஸ் தாக்கும் என்பதை விட அனைத்து வயதினரையும் சரி நிகராக இந்த ஆட்கொல்லி தாக்கவல்லது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

”வியாபாரம் இல்லைதான்; ஆனால், கொரோனாவுக்கு இது பரவாயில்லை” : நெகிழ வைத்த பூ விற்கும் பெண்மணியின் பேச்சு

இப்படி இருக்கையில், நாளை (மார்ச் 22) கொரோனாவால் ஏற்படும் சமூக பரவலை (social distance) தடுக்க பிரதமர் மோடி சுய ஊரடங்கில் ஈடுபட வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலமே அடுத்த சில நாட்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான lockdown முறையை கையாளமுடியும் என மோடி கூறியுள்ளார்.

இதனையடுத்து, தேசிய மக்கள் ஊரடங்கை அடுத்து வணிகங்கள், போக்குவரத்துகள், சிறு குறு கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பணியாளர்கள், ஊடகங்கள் தவிர மற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

”வியாபாரம் இல்லைதான்; ஆனால், கொரோனாவுக்கு இது பரவாயில்லை” : நெகிழ வைத்த பூ விற்கும் பெண்மணியின் பேச்சு

இந்நிலையில், சமூக வலைதளங்களில் இந்த தேசிய மக்கள் ஊரடங்கு குறித்து பலர் விவாதித்தும் கருத்து தெரிவித்தும் வருகின்றனர். நெட்டிசன்கள் மீம்ஸ் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். அந்த வகையில், பூ வியாபாரம் செய்யும் பெண் தொழிலாளர் ஒருவர் இந்த மக்கள் ஊரடங்கு உத்தரவு குறித்து இணையதள சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், “பூ வியாபாரம் சுணக்கமாகதான் இருக்கிறது. ஒரு வாரமாகவே வியாபாரம் செய்யமுடியாத சூழல்தான் நிலவுகிறது. இந்த கொரோனா வைரஸால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. ஆனாலும், மக்கள் பொதுவெளியில் நடமாடாமல் இருப்பது நல்லதுதான். இந்த நோய் பரவாமல் இருக்கனும் என்றால் 20 நாட்களுக்கு வியாபாரமே இல்லையென்றாலும் பரவாயில்லை.

ஏனெனில் இது ஒரு தனிநபருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனிதர்களையும் பாதிக்கவல்லது. ஆகையால் இதனை சமாளித்துக்கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை. இப்படி மக்கள் வெளியே வராமல் இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. சந்தோஷம்தான்” என அந்த பெண்மணி கூறியுள்ளார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் அனைவரது மனதையும் வென்றுள்ளது.

banner

Related Stories

Related Stories