Corona Virus

இளைஞர்களையும் கொரோனா தாக்கும் - அலட்சியம் வேண்டாம் என WHO எச்சரிக்கை! #CoronaAlert 

முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டுமே கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் என்று பரவி வரும் தகவல்களுக்கு உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150க்கும் மேலான நாடுகளை ஆட்டம் காண வைத்து வருகிறது. 3 மாதங்களுக்கு பிறகு தற்போது சீனாவில் கொரோனாவின் தாண்டவம் குறைந்திருந்தாலும் இத்தாலியை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவைக் காட்டிலும் இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது.

சீனாவில் 3 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கையோ இத்தாலியில் 4 ஆயிரத்தை கடந்துள்ளது. உலக அளவில் இந்த கொரோனா வைரஸ் 11 ஆயிரத்துக்கும் மேலான மக்களை காவு வாங்கியுள்ளது. மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இளைஞர்களையும் கொரோனா தாக்கும் - அலட்சியம் வேண்டாம் என WHO எச்சரிக்கை! #CoronaAlert 

இப்படி இருக்கையில், இந்த கொரோனா வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளையுமே பெரிதும் தாக்குவதாகவும், இளம் வயதில் உள்ளவர்களை எளிதாக தாக்குவதில்லை என்றும் பேச்சு இருந்தது.

ஆனால், அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அதானம் கேபிரியசஸ்.

இது தொடர்பாக பேசியுள்ள அவர், “கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக கொரோனாவால் பரப்படும் வதந்திகளை எதிர்கொள்வதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களே இந்த கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என பல நாடுகளில் பேசப்படுகிறது. ஆனால் 50 வயதுக்கும் குறைவானவர்களே பெரும்பாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tedros Adhanom Ghebreyesus, WHO Director
Tedros Adhanom Ghebreyesus, WHO Director

இளைஞர்கள் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியாதவர்கள் அல்ல. இந்த வைரஸால் நீங்கள் வாரக்கணக்கில் மருத்துவமனையில் முடங்கும் நிலை உருவாகும். உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும். வைரஸ் தொற்றுக்கு ஆளாகாவிட்டாலும், இளைஞர்களாகிய நீங்கள் செல்லும் இடத்தை பொறுத்து நோய்த் தாக்கக்கூடும். ஆகவே சமூக பரவலுக்கு முன்பு ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு எவ்வித பரவலும் ஏற்பட்டுவிடாத வகையில் Physical Distance முறையை பின்பற்ற வேண்டும்” என டெட்ராஸ் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories