Corona Virus

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பலி.. 1 மணி நேரத்தில் 50 பேர் பாதிப்பு - கையறுநிலையில் கதறும் ஈரான்!

ஈரானில் 10 நிமிடங்களுக்கு ஒருவர் இறப்பதாகாவும், ஒரு மணிநேரத்தில் 50 பேர் பாதிக்கப்படுவதாகவும் ஈரான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாததால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சீனாவைத் தொடர்ந்து, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் வெகுவேகமாகப் பரவி வருகிறது. ஈரான், இத்தாலி நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 11,000 பேர் வரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 1,433 ஆக இருந்தது. இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 123 பேர் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பலி.. 1 மணி நேரத்தில் 50 பேர் பாதிப்பு - கையறுநிலையில் கதறும் ஈரான்!

இதனால் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 20,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஈரான் சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜகான்பூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரானில் 10 நிமிடங்களுக்கு ஒருவர் இறப்பதாகாவும், ஒரு மணிநேரத்தில் 50 பேர் பாதிக்கப்படுவதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு மீது பொருளாதார நடவடிக்கை விதிக்கப்பட்டுள்ளதால் கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். மருத்துவ உபகரணங்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லாமல் திணறி வருகின்றனர். இதனால் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு உதவ முன்வர வேண்டுமென்று ஈரான் வேண்டுகோள் விடுத்தள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் வேகமும், உயிர்ப்பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது ஈரான் மட்டுமல்லாமல் உலக நாட்டு மக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories