Corona Virus

#Corona வாய் வித்தையாக இருக்கிறதா மோடியின் அறிவிப்பு - கனடா பிரதமரின் அறிவிப்போடு ஓர் ஒப்பீடு!

கொரோனா வைரஸ் பரவல் குறித்தும் பொருளாதார நிலை குறித்தும் பிரதமர் மோடியும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பேசியதன் ஒப்பீடு.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் உலகம் முழுவதும் உள்ள மக்களை படாதப்பாடு படுத்தி வருகிறது. இதானல் ஏற்பட்ட உயிரிழப்புகள் 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேலான மக்கள் இன்றளவும் கொரோனாவுக்கு எதிரான உடல்நிலையுடன் போராடி வருகின்றனர்.

கோவிட் 19 நோயால் நூற்றுக்கணக்கான நாடுகளின் போக்குவரத்து முடக்கப்பட்டு, எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இருப்பினும் சீனா, அமெரிக்கா, கனடா என பல நாடுகள் மக்களின் பொருளாதார பிரச்னையை தீர்க்கும் வகையில் நிதி ஒதுக்கி வருகின்றன.

#Corona வாய் வித்தையாக இருக்கிறதா மோடியின் அறிவிப்பு - கனடா பிரதமரின் அறிவிப்போடு ஓர் ஒப்பீடு!

இப்படி இருக்கையில், கடந்த வியாழன் அன்று இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் பிரதமர் மோடி. அதில், மார்ச் 22 அன்று சோதனை ஓட்டமாக தேசிய மக்கள் ஊரடங்கு அறிவித்ததோடு மக்கள் பதட்டமடையாமல் சமூக பரவலை (social distancing) தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

கொரோனாவை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் பிரதமர் மோடி அறிவிக்கவில்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது நாட்டு மக்களுக்காக அறிவித்த நோய் கட்டுப்பாடு, சிகிச்சை, பொருளாதார உதவி ஆகியவற்றை மோடி பேசியதோடு ஒப்பிட்டு வருகின்றனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே பேசியதாவது “நாம் அனைவருமே ஏதேனும் ஒரு வகையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நமது வாழ்க்கை முறையை கொரோனா வைரஸ் கட்டாயமாக மாற்றியமைத்திருக்கிறது.

வீட்டில் இருந்து வேலை செய்கிறோம். அனைவருக்குமே வேலை பற்றி கவலைகள் வந்திருக்கிறது. குழந்தைகளைப் பற்றிய கவலையும், நடைமுறை வாழ்வில் நமது செலவினங்கள், கடன்கள், செலுத்த வேண்டிய தொகைகள் பற்றிய கவலைகள் நமக்கு உள்ளது.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். உங்களின் இந்த பிரச்சனைகளை புரிந்து கொண்டுள்ள கனடா அரசு உங்களின் பின்னால் இருக்கிறது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். நமது பொருளாதாரத்தையும், வேலைகளையும் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று முன்கூட்டியே திட்டமிட்டு வருகிறோம்.

தொழிலாளர் காப்பீடு திட்டங்களில் புதிய விதிகளை சேர்த்து வருகிறோம். அவை அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும். கொரோனா அவசரகாலத்தை எதிர்கொள்ள 82 பில்லியன் டாலரை கனடா அரசு ஒதுக்கியுள்ளது. பொருளாதாரத்தையும் பாதிக்கப்பட்ட மக்களையும் மேம்படுத்தவும், பாதுகாக்கவும் இந்த நிதி போதுமானது.

நீங்கள் உடல் நலம் குன்றியிருக்கின்றீர்கள். உங்களிடம் இன்சூரன்ஸ் இல்லை. தொழிலாளர்களுக்கான காப்புறுதியும் இல்லை. இப்படி உங்களுக்கு ஏற்படும் இழப்பை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கனடா அரசு உங்களுக்குக் கொடுக்கும்.

குழந்தைகள் நல நிதியில் இருந்து தனி நிதி குழந்தைகள் நலனுக்காக செலவிடப்படும். சிறு தொழிலைக் காக்க தற்காலிக மானியம் வழங்கப்படும்.

வீடற்றவர்கள், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், பின் தங்கிய பிரிவினர், என அனைவரையும் இந்த மானிய வரம்பிற்குள் கனடா அரசு கொண்டு வந்துள்ளது. கனடா எல்லை மூடப்பட்டுள்ளது. கவலைப்படாதீர்கள் உங்களுக்கு ஏற்படும் இழப்புகள் தொடர்பாக கவலை வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.” எனக் கூறியுள்ளார்.

கனடா பிரதமரின் இந்த அறிவிப்புகள் நாடுகளை கடந்து மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மோடியின் அறிவிப்பை ட்ருடேவின் அறிவிப்புகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்திய அரசிடம் இந்த அவசர நிலையை சமாளிக்க போதிய முன்னெச்சரிக்கை திட்டங்கள் இல்லை என்றே தோன்றுகிறது.

banner

Related Stories

Related Stories