உலக நாடுகளை அடுத்து, இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நோய் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவில் 258 பேருக்கு தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் 5 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
ஆகவே, நாளை ஒருநாள் நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என மத்திய அரசு அறிவுறித்தியுள்ளாது. இதனால், பொது போக்குவரத்துகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. சிறு குறு வணிகர்கள், கூலித் தொழிலாளர்கள் இந்த தேசிய ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் வருவாய் இழந்து பாதிக்கப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலனுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்.
தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து ஒருமாத ஊதியமான 2.25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிரந்தர ஊதியம் பெறுபவர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேண்டுகோள்.
முன்னதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சளி, இருமல், காய்ச்சல் போன்ற உபாதைகள் இருப்பவர்கள் விசாரணை அறைக்கு வருவதை தவிர்க்கும்படி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.