Corona Virus

“கொரோனாவிலிருந்து தப்பிக்க இதுதான் நேரம்; அனைத்து நகரங்களையும் முடக்குக” - ப.சிதம்பரம் வலியுறுத்தல்!

சமூக பரவல் எனும் கொரோனாவின் 3வது நிலையை அடைவதற்கு முன்பே நகரங்களை மூடுவதற்கு இதுதான் சரியான தருணம் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

P Chidambaram - Modi
P Chidambaram - Modi
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் அறிக்கையின் படி கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது நிலையிலேயே உள்ளது.

ஆகையால், இந்த பாதிப்பு அடுத்த நிலைக்குச் சென்றுவிடாத வகையில் நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

“கொரோனாவிலிருந்து தப்பிக்க இதுதான் நேரம்; அனைத்து நகரங்களையும் முடக்குக” - ப.சிதம்பரம் வலியுறுத்தல்!

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதைத் தடுக்கும் வகையில் அனைத்து நகரங்களையும் அடுத்த 2 முதல் 4 வாரங்களுக்கு மூடும்படி அரசை வலியுறுத்தி ட்வீட் செய்துள்ளார்.

மேலும், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் மாதிரி சோதனையின் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் 3வது நிலையை அடையவில்லை. ஆகவே 2வது நிலையிலேயே கொரோனாவை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் இதுதான் சரியான நேரம்.

ஒரு சில மாநில அரசுகள், மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்பே தத்தம் நகரங்களில் பல்வேறு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஈரான், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதை கண்கூடாக பார்த்த பிறகும் மத்திய அரசு உடனடி தடை உத்தரவை பிறப்பிப்பதில் மெத்தனம் காட்டுவது ஏன்?" எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories