Corona Virus

“தமிழகத்தில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு?” : வதந்தி பரப்பிய 2 பேர் கைது - போலிஸ் அதிரடி!

கொரோனா குறித்து வதந்தி பரப்பிய இரண்டு பேரை தமிழக போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் மக்களை பெரிதும் பாதித்துள்ளது. பல்வேறு நாடுகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிக்கை எடுத்துவருகின்றார்.

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அரசுகள் தெரிவித்துவருகின்றனர். இந்த சூழலில் சில விஷமிகள் ஆதாரம் இல்லாத போலியான கருத்துக்களையும், வதந்திகளையும் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

இதனால் பல நாடுகளில் உயிர்பலி கூட நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், அரசுகள் கொரோனா குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பதில், போலி செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு பதில் அளித்து பிரச்சாரம் செய்யும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

“தமிழகத்தில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு?” : வதந்தி பரப்பிய 2 பேர் கைது - போலிஸ் அதிரடி!

இம்மாதிரியான போலி செய்திகள் இந்தியாவிலும் அதிகம் பரப்பப்படுகிறது. உதாரணமாக, மாட்டு சாணம், கோமியம் மூலம் கொரோனா கட்டுப்படுத்தபடும் என குறிப்பிட்டவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக விளம்பரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட பாதுகாப்பு பணியில் இருத்த காவலருக்கு கோமியம் குடிக்க வைத்த வழக்கில் பா.ஜ.க தலைவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா குறித்து வதந்தி பரப்பிய இரண்டு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மதுரை மாவட்டத்தில் நெல் கதிர் அறுவை வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இவர் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே ராஜாக்கூர் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கொரோனா வைரஸ் பாதித்த 47 பேரை தங்க வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும், அதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டார்.

“தமிழகத்தில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு?” : வதந்தி பரப்பிய 2 பேர் கைது - போலிஸ் அதிரடி!

இதுகுறித்து தகவல் அறிந்த ஒத்தக்கடை போலிஸார், செல்வம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அதேப்போல், நாகை மாவட்டம் குத்தாலம் மேலசெட்டி தெருவை சேர்ந்தவர் ஆனந்த் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்துள்ளார்.

இதற்கிடையே அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய மயிலாடுதுறை பிரகாஷ் என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் தேவையற்ற வீண் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் எச்சரித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories