Corona Virus

‘முட்டை...சப்பாத்தி...பொறித்த மீன்..’ : கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு கேரள அரசு வழங்கும் சிறப்பு உணவு!

கேரளா மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சப்பாத்தி, பொறித்த மீன் உட்பட சிறப்பு உணவு வழங்கப்படுகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து நோய் பாதித்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு விசே‌ஷ உணவுகளும் வழங்கப்படுகிறது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு காலை உணவாக தோசை, சாம்பார், 2 அவித்த முட்டை, 2 ஆரஞ்சு பழங்கள், டீ மற்றும் ஒரு பாட்டில் குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பழச்சாறு வழங்கப்படும்.

மதிய உணவாக சப்பாத்தி, பொறித்த மீன் மற்றும் கேரள உணவு வகைகள் வழங்கப்படுகிறது. மாலையில் பிஸ்கெட், டீயும், இரவு அப்பம், 2 வாழைப்பழங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘முட்டை...சப்பாத்தி...பொறித்த மீன்..’ : கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு கேரள அரசு வழங்கும் சிறப்பு உணவு!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தனி உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு காலை 2 அவித்த முட்டை, சூப், பழச்சாறு ஆகியவை வழங்கப்படுகிறது.

சிறிது நேர இடைவெளிக்கு பிறகு அன்னாசி பழச்சாறு வழங்கப்படும். பகல் உணவாக ரொட்டி, வெண்ணை மற்றும் பழங்களும், இரவில் ரொட்டி, முட்டை பொறியல், பழங்கள் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories