Corona Virus

“இதை செய்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்” - பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் பேட்டி!

தமிழக அரசு வெளிப்படத் தன்மையுடன் இந்த கொரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து சூழலியலாளர் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கலைஞர் செய்திகள் இணையப்பிரிவிடம் விரிவாக பேசியுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

கொரோனாவின் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கு சீனாவின் வூஹான் மற்றும் தென் கொரியாவின் முறைகள் உள்ளது. அதாவது வூஹானில் முறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை மற்றும் ஒவ்வொருவரையும் பரிசோதித்து கோவிட் 19 பாதிப்பு உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் தென் கொரியாவின் முறை.

இவை இரண்டையும் கலந்தாற்போல் அல்லது ஏதேனும் ஒரு நுட்பத்தை இந்தியாவில் கையாண்டு நடவடிக்கை மேற்கொள்ளலாம். இல்லையே ஒட்டுமொத்தமாக ஒரு 10 நாட்களுக்கு நாடு முழுவதும் lock down முறையை பின்பற்றி முக்கியமான அவசர கால சேவைகளான தீயணைப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை மட்டும் விடுத்து வைரஸ் பரவலை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுபோன்று கையாள்வதின் மூலம் வைரஸ் பாதிப்பின் 3வது நிலை எனும் சமூக பரவலை தடுக்க முடியும். இதனை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.

அதேச்சமயத்தில் மக்களும் தனிநபர் சுகாதாரத்தை பேணவேண்டும். அதாவது, கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுதல், பொது போக்குவரத்துகளை உபயோகிக்காமல் இருப்பது, குடும்பத்தில் எவருக்கும் காய்ச்சல் போன்ற வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

நமது பகுதிகளில் வைரஸ் பரவாது என அலட்சியமாக இருக்கக் கூடாது. இதனால் தனிநபர் ஒருவரை விட ஒட்டுமொத்த சமூகமும் பாதிப்பை சந்திக்க நேரிடும். ஆகவே மக்கள் ஒவ்வொருவரும் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.

மேலும், தமிழக அரசு வெளிப்படத் தன்மையுடன் இந்த வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பேர் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அண்டை மாநிலமான கேரளாவில் தெரிவிப்பதை போன்று தமிழக அரசும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

banner

Related Stories

Related Stories