Corona Virus

கொரோனா அபாயம் : தனிமைப்படுத்தப்பட்ட 4 பேர் மும்பை ரயிலில் பயணம் - அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

கொரோனா அச்சம் காரணமாக தனிமைப் படுத்தப்பட்ட 4 பேர் மும்பை ரயிலில் பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து மும்பை திரும்பியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என மாநகராட்சியின் சுகாதாரத்துறை ஊழியர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வின்போது கொரோனா அறிகுறிகளுடன் யாராவது கண்டறியப்பட்டால் அவர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப் படுகின்றனர். அதன்படி, வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நபர்; 'மும்பையை பாதுகாப்பதில் பெருமை கொள்கிறேன்’ என்றும் எத்தனை நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படுவார் என்ற தேதியுடனும் குறிப்பிட்டு அந்த நபரின் இடது கையில் முத்திரை குத்தப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் மும்மை பால்கர் ரயில் நிலையத்தில் கல்க் ரத்தின் ரயில் பயணித்த நான்கு பேரின் கைகளில் தனிமைப் படுத்தப்பட்டதற்கான முத்திரைகள் இருந்துள்ளன. இதைக்கண்ட பொதுமக்கள் உடனே கூச்சலிட துவங்கியுள்ளனர்.

கொரோனா அபாயம் : தனிமைப்படுத்தப்பட்ட 4 பேர் மும்பை ரயிலில் பயணம் - அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

இதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் பாதுகாப்பிடத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தையடுத்து 4 பேர் பயணித்த அந்த ரயில் கிருமி நாசினி கொண்டு செய்து சுத்தம் செய்யப்பட்ட பின்னரே புறப்பட்டுச் சென்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் போலிஸாரும், சுகாதாரத் துறையினரும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories