Corona Virus

கொரோனா வைரஸ் எதிரொலி: காணொளி மூலம் திருமணம் செய்துகொண்ட தெலங்கானா ஜோடி !

கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக காணொளி மூலம் தெலங்கானாவைச் சேர்ந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியாவில் இருந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கான விமான சேவைகள் வருகிற மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, விசா புதுப்பிக்கும் நடவடிக்கைகளும், விசா விண்ணப்பிக்கும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதித்த நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் எதிரொலி:  காணொளி மூலம் திருமணம் செய்துகொண்ட தெலங்கானா ஜோடி !

இந்நிலையில், தெலங்கானாவின் கோட்டங்குடம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல் நபி என்பவரின் மகளுக்கும், சவுதியில் பணிபுரியும் முகமது அத்னான் கான் என்பவருக்கும் கடந்த ஞாயிறன்று திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் சவுதியில் இருந்து அத்னான் கானால் இந்தியா வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமா என உறவினர்கள் மத்தியில் சலசலப்பு உண்டானது.

கொரோனா வைரஸ் எதிரொலி:  காணொளி மூலம் திருமணம் செய்துகொண்ட தெலங்கானா ஜோடி !

இதனால் திருமணம் தடைபட்டு விடாதபடி, காணொளி காட்சி மூலம் திருமண சடங்குகள் நடத்தப்பட்டிருக்கிறது. அசாதாரண சூழல் நிலவும் சமயத்தில் சாதுர்யமாக முடிவெடுத்து ஆன்லைன் மூலம் திருமணத்தையே நடத்தி முடித்திருப்பது வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த நிகழ்வு ஒரு முன்னுதாரணமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories