Corona Virus

கொரோனாவால் 60% இந்திய மக்கள் பாதிக்கப்படலாம் - பிரபல மருத்துவர் எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான சோதனைகளை அரசு மேலும் கடுமையானதாக்க வேண்டும் என மருத்துவர் லஷ்மிநாராயண் கூறியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவில் தொடங்கி ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், மத்திய கிழக்கு நாடுகளான துபாய், ஓமன், கத்தார், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என சுமார் 150 நாடுகளில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதில், முதன் முதலில் சீனாவில் ஆரம்பித்த இந்த கோவிட் 19 வைரஸ் 3 மாதங்களுக்கு பிறகு அங்கு கட்டுக்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கையில், மேற்குறிப்பிட்ட 150 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. கொரோனா பாதித்த வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் மக்களாலும், சுற்றுலாப் பயணிகளாலும் இங்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அறிக்கையின் படி 147 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் இந்தியாவில் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள்.

கொரோனாவால் 60% இந்திய மக்கள் பாதிக்கப்படலாம் - பிரபல மருத்துவர் எச்சரிக்கை!

இந்நிலையில், The Wire இணையதள செய்தி நிறுவனம் மேற்கொண்ட நேர்காணலில் வாஷிண்டனைச் சேர்ந்த மருத்துவரும், பொருளாதார நிபுணருமான ரமணன் லஷ்மி நாராயண் இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து விரிவாக பேசியுள்ளார்.

அதில்,“ கொரோனா வைரஸின் அடுத்த புகலிடமாக அல்லது பகிரலையாக இந்தியா திகழலாம். ஏனெனில், அமெரிக்காவில் 20-60 சதவிகித மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என அந்நாடு மதிப்பிடுகிறது. அதன்படி, இந்தியாவில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் சுமார் 60 சதவிகித மக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகலாம். அதுவும் மோசமான கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் மேற்குறிப்பிட்ட விகிதச்சாரத்தில் மக்கள் பாதிக்கப்படலாம்.

இருப்பினும், பெரும்பாலான மக்கள் லேசான பாதிப்புக்கு மட்டுமே ஆளாக நேரிடும். மிகச்சிறிய சதவிகித மக்கள் தீவிர பாதிப்புக்கும், வெகு சிலர் உயிரிழக்கவும் நேரிடும். பிரிட்டனில் 12 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தபோது குறைத்து மதிப்பிட்டதை போல, தற்போது அங்கு என்ன நிலவரம் உள்ளதோ அதுவே இந்தியாவிலும் பிரதிபலிக்கக்கூடும். அதாவது, 1,500 பேராவது வைரஸ் பாதிப்பு குறித்து கண்டறியப்படாமல் இருக்கலாம்.

கொரோனாவால் 60% இந்திய மக்கள் பாதிக்கப்படலாம் - பிரபல மருத்துவர் எச்சரிக்கை!

உண்மையில், இந்தியாவின் மக்கள்தொகையை எண்ணிப்பார்த்தால் 10 ஆயிரம் அல்லது அதற்கு மேலானோர் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பது கண்டறியப்படாமல் இருக்கலாம். கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் 2ம் கட்டத்திலேயே உள்ளது என இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ICMR) தெரிவித்திருக்கிறது.

ஆனால், உலகின் மற்ற நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் மதிப்பிட்டால் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பே இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 3ம் கட்டத்தை எட்டியிருக்கும். பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, பொதுவெளியில் மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட போதே இந்தியா 3வது கட்டத்தில் நுழைந்துள்ளது என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ள முடியும்.

ICMRன் அறிக்கையின் படி மார்ச் 17ம் தேதி மாலை 5 மணிவரை 11,500 பேர் மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேராவது சோதனைக்கு உட்படுத்தவேண்டும். ஆகவே, கடுமையான சோதனையை இந்தியா பலப்படுத்தவேண்டும்.

ICMRன் கொள்கையின்படி, கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்கள், தொற்று உள்ளவர்களுடன் பழகியவர்களை சோதிக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டாலும், காய்ச்சல், இருமல், சளி போற்ற உபாதைகள் இருப்பவர்களை சோதிப்பது முக்கியம். ஏன் கொரோனா பாதித்த நாடுகளுக்கு செல்லாத, தொற்று பாதித்தவர்களுடன் பழகாதவர்களையும் சோதிப்பது முக்கியமாகும்.

இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் சோதிக்கப்பட வேண்டும், இல்லையெனில் சாதாரண பருவகால சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு மாறாக இத்தகைய அறிகுறிகளைக் கொண்டவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் கொரோனா வைரஸுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியாமல் போகக்கூடும்.

4 முதல் 8 மில்லியன் மக்களுக்கு இடையே ICU சிகிச்சை தேவைப்படலாம் என்று கருதினால், அதற்கான உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பல வகையான மருந்துகளை இந்திய அரசு இறக்குமதி செய்தாக வேண்டும்.

இதுபோக, சாதாரண மக்கள் தங்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் போன்ற உபாதைகள் இருப்பின் குறைந்தது ஒரு வாரத்திற்கு வீட்டிலேயே தங்கியிருத்தல் நல்லது. 4 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் போன்றவை நீடித்தால் உடனடியாக அவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லையேல் உடனடி பரிசோதனைக்கு முந்திச் செல்லவேண்டிய அவசியம் இல்லை.

கொரோனாவால் 60% இந்திய மக்கள் பாதிக்கப்படலாம் - பிரபல மருத்துவர் எச்சரிக்கை!

வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டால் குடும்பத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு தேவையான பொருட்களை 2 அடி இடைவெளிவிட்டு கொடுக்கலாம். அவர்களது உடைகளை வெறும் கையாலேயே துவைக்கலாம். கையுறை அணிய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை கைகளை நன்றாக சுத்தமாக கழுவினாலே போதுமானது.

மற்றபடி, கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் இல்லை. நோய் தொற்று இல்லாதவர்கள் அநாவசியமாக மாஸ்க், கையுறைகள் அணிவதால் மருத்துவப் பணியாளர்களுக்கே அந்த பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படும். மேலும், பசுவின் கோமியம் குடிப்பதால் கொரோனா பாதிப்பு வராது என்றும், கொரோனா நோய் அகலும் என்றும் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை.

ஹோமியோபதி போன்ற வைத்தியங்களை மேற்கொள்ளவும் எந்த அறிவியல் அறிஞர்களும் பரிந்துரைக்கவில்லை.” என மருத்துவர் லஷ்மி நாராயண் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories