Corona Virus

“எங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறோம்;மீட்டுச் செல்லுங்கள்”- பிலிப்பைன்ஸில் உள்ள இந்திய மாணவர்கள் உருக்கம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து நாளைக்குள் இந்திய மாணவர்கள் வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் இரண்டாம் நிலையை அடைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அறிவித்துள்ளது. இதுவரை 147 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மலேசியா, ஆஃப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் வரும் விமான சேவைகளுக்கு 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

“எங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறோம்;மீட்டுச் செல்லுங்கள்”- பிலிப்பைன்ஸில் உள்ள இந்திய மாணவர்கள் உருக்கம்!

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வரும் சுமார் 200க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை தாய்நாடு திரும்பும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 19ம் தேதிக்குள் நாடு திரும்பவேண்டும் எனவும் கூறியுள்ளது.

ஆனால், மத்திய அரசு, பிலிப்பைன்ஸில் இருந்து விமானங்கள் இந்தியாவுக்கு வர தடை விதித்துள்ளதால் இந்திய மாணவர்கள் அந்த நாட்டில் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள மாணவர் ஒருவர், “இந்தியா வந்ததும் நாங்களே எங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறோம். கட்டாயம் எங்களால் யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படாது. நாங்களும் மருத்துவம் படித்தவர்கள்தான். நாளைக்குள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய சூழலில் தவித்து வருகிறோம். உணவு, குடிநீர் என எதுவும் கிடைக்கவில்லை. மத்திய அரசு எங்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories