Corona Virus

Corona Alert: "கிருமிநாசினி, மாஸ்க் விலையை கட்டுப்படுத்தத் தவறியது ஏன்?” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

முகக் கவசம் மற்றும் கிருமிநாசினிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு, பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முகக் கவசம் மற்றும் கிருமிநாசினிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு, பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், முகக் கவசங்கள், கிருமிநாசினி திரவங்களை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும், அவை பதுக்கி வைக்கப்படுவதையும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் பிற மாநில அரசுகள் உத்தரவுகளை பிறப்பித்த போதும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Corona Alert: "கிருமிநாசினி, மாஸ்க் விலையை கட்டுப்படுத்தத் தவறியது ஏன்?” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

அந்த மனுவில், அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ள முகக் கவசம், கிருமிநாசினிகளை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வது ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில், முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் கிடைக்காத நிலை உள்ளதால், மாநில அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலனளிக்காது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று தமிழக அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு மார்ச் 20ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

banner

Related Stories

Related Stories