Corona Virus

ஜேம்ஸ்பாண்ட் கதாநாயகியைத் தாக்கிய கொரோனா வைரஸ் - வீட்டில் தனிமையில் இருப்பதாக பரபரப்புத் தகவல்!

ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோ, தனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி உள்ளது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் சிலரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்த வகையில், ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோ கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ளார். இவர், குவாண்டம் ஆப் சோலஸ், ஒபிலிவியான், மொமன்டம், த ரூம் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

ஜேம்ஸ்பாண்ட் கதாநாயகியைத் தாக்கிய கொரோனா வைரஸ் - வீட்டில் தனிமையில் இருப்பதாக  பரபரப்புத் தகவல்!

தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அவரே தெரிவித்துள்ளார். ‘எனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறேன். காய்ச்சல் மற்றும் உடல் சோர்வாக இருப்பதுதான் இதன் முதல் அறிகுறிகள். உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். இதை சீரியசாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று ஓல்கா குரிலென்கோ தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு பதிவொன்றில், தான் வீட்டில் தனிமையாக இருப்பதாகவும், தன் நலன் பற்றி விசாரித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

View this post on Instagram

Locked up at home after having tested positive for Coronavirus. I’ve actually been ill for almost a week now. Fever and fatigue are my main symptoms. Take care of yourself and do take this seriously! Сижу в изоляции дома с диагнозом Коронавирус. Уже почти неделю болею. Температура и слабость - мои основные симптомы. Будьте осторожны и принимайте это во всерьёз! #coronavirus #коронавирус

A post shared by Olga Kurylenko (@olgakurylenkoofficial) on

banner

Related Stories

Related Stories