Corona Virus

#Corona “கொஞ்ச நாள் இதையெல்லாம் நிறுத்தி வைங்க” - கிரிமினல்களுக்கு அமெரிக்க காவல்துறை அட்வைஸ்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் திருடர்களுக்கு அறிவுறுத்தி நன்றி தெரிவித்து வாஷிங்டன் மாகாண போலிஸார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அதேபோல, அமெரிக்காவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார மையத்தின் தகவலின்படி அமெரிக்காவில் இதுவரை 4,545 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 73 பேர் பலியாகியும் உள்ளனர்.

ஆகையால், அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஐரோப்ப நாடுகளுடனான போக்குவரத்தை ரத்து செய்தார். அதேபோல, அமெரிக்காவின் வாஷிங்டனில் 250 பேர் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், ஏப்ரல் 24ம் தேதி வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

#Corona “கொஞ்ச நாள் இதையெல்லாம் நிறுத்தி வைங்க” - கிரிமினல்களுக்கு அமெரிக்க காவல்துறை அட்வைஸ்!

இந்நிலையில், குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களுக்கு வாஷிங்டனில் உள்ள புயல்லுப் நகர காவல்துறை விநோதமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள புயல்லுப் போலிஸார், கோவிட்-19 தாக்கம் அதிகரித்துள்ளதால் குற்றச்செயல்களில் ஈடுபடும் திருடர்கள், கொள்ளையர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களுடைய வேலைகளை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், குற்றச்செயல் செய்வோர் பொதுநலன் கருதி தங்களது வேலையை நிறுத்தி வைப்பதற்காக முன்கூட்டியே புயல்லுப் காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம், பின்னர் எப்போது உங்கள் வேலையில் ஈடுபடத் தொடங்கலாம் என்பதை நாங்களே அறிவிக்கிறோம் என பதிவிட்டுள்ளது. இந்த ட்வீட் தற்போது நெட்டிசன்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, உட்டா மாகாணத்தில் உள்ள சால்ட் லேக் சிட்டி நகர காவல்துறையினரும், குற்றச்செயல்களை நிறுத்தி வைக்குமாறு கிரிமினல்களுக்கு வலியுறுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டு அவர்களின் சமூக அக்கறைக்கு நன்றியும் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories