Corona Virus

கொரோனா பரவாமலிருக்க அண்டை மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்துக - தமிழக அரசுக்கு துரைமுருகன் அட்வைஸ் !

கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு அண்டை நாட்டு அரசுகளுடன் ஆலோசனை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகெங்கிலும் கொரோனா பரவுவதை போல, இந்தியாவிலும் அதன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அதிலும் தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரும் கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொடர்பான பீதி மக்களிடையே நிலவு வருகிறது. ஏற்கெனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து அவர் நீங்கிவிட்டாலும் இன்னும் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் திருச்சியில் இருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் சீரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவாமலிருக்க அண்டை மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்துக - தமிழக அரசுக்கு துரைமுருகன் அட்வைஸ் !

இது தொடர்பாக பேசிய துரைமுருகன், கொரோனா வைரஸ் பாதிப்பு விஸ்வரூபமெடுத்து, அனைத்து இடங்களிலும் பரவியிருக்கிறது. கேரளா மற்றும் ஒடிசா சட்டப்பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தலை ஆறு மாதத்திற்கு தள்ளிவைத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும், சென்னையில் மட்டுமின்றி கிராமங்களிலும், ஒன்றியம் உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து வேலூருக்கு அதிகமானோர் வருகின்றனர். எனவே, முறையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா பாதிப்பை தடுக்க சார்க் நாடுகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதைப் போல, அண்டை மாநில முதல்வர்கள் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்த வேண்டும். தற்போது அனைவரும் அச்சப்படக்கூடிய விதத்தில், உயிரை கையில் பிடித்து இருப்பதாகவும், மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories