சினிமா

“கமல்ஹாசன் To ஹிருத்திக் ரோஷன்..” அபுதாபியில் IIFA 2023 விருது பெற்ற இந்திய திரைபிரபலங்கள் யார் யார் ?

அபுதாபியில் நடைபெற்ற IIFA விருது வழங்கும் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகர் கமல்ஹாசன் பெற்றுள்ளார்.

“கமல்ஹாசன் To ஹிருத்திக் ரோஷன்..” அபுதாபியில் IIFA 2023 விருது பெற்ற இந்திய திரைபிரபலங்கள் யார் யார் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருது ஆண்டுதோறும் நடைபெற்று வரும். அந்த வகையில் இந்த ஆண்டு அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிஷேக் பச்சான் ஆகியோர் தொகுத்து வழங்கினர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

“கமல்ஹாசன் To ஹிருத்திக் ரோஷன்..” அபுதாபியில் IIFA 2023 விருது பெற்ற இந்திய திரைபிரபலங்கள் யார் யார் ?

இந்த நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அதில் வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகர் கமல்ஹாசன் பெற்றுள்ளார். நடிகர் கமலுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விருதினை வழங்கி கெளரவித்தார்.

“கமல்ஹாசன் To ஹிருத்திக் ரோஷன்..” அபுதாபியில் IIFA 2023 விருது பெற்ற இந்திய திரைபிரபலங்கள் யார் யார் ?
“கமல்ஹாசன் To ஹிருத்திக் ரோஷன்..” அபுதாபியில் IIFA 2023 விருது பெற்ற இந்திய திரைபிரபலங்கள் யார் யார் ?

அதே போல் IIFA விருது பெற்றவர்கள் பட்டியல் இதோ :-

* சிறந்த நடிகர் : ஹ்ரித்திக் ரோஷன் (விக்ரம் வேதா)

* சிறந்த நடிகை: ஆலியா பட் (கங்குபாய் கத்தியாவாடி)

* சிறந்த இயக்குநர்: ஆர்.மாதவன் (ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்)

* சிறந்த துணை நடிகர்: அனில் கபூர் (ஜக் ஜக் ஜீயோ)

* சிறந்த துணை நடிகை: மௌனி ராய் (பிரம்மாஸ்திரா: பாகம் 1)

“கமல்ஹாசன் To ஹிருத்திக் ரோஷன்..” அபுதாபியில் IIFA 2023 விருது பெற்ற இந்திய திரைபிரபலங்கள் யார் யார் ?

* சினிமா ஆடை வடிவமைப்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது: மனிஷ் மல்ஹோத்ரா

* சிறந்த தழுவல் திரைக்கதை: ஆமில் கீயான் கான் மற்றும் அபிஷேக் பதான் (த்ரிஷ்யம் 2)

* சிறந்த ஒரிஜினல் கதை: பர்வேஸ் ஷேக் மற்றும் ஜஸ்மீத் ரீன் (டார்லிங்ஸ்)

* பிராந்திய சினிமாவில் சிறந்த சாதனைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது: ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா (வேத்)

* சிறந்த அறிமுக நடிகர்: ஷாந்தனு (கங்குபாய்) மற்றும் பாபில் கான் (காலா)

“கமல்ஹாசன் To ஹிருத்திக் ரோஷன்..” அபுதாபியில் IIFA 2023 விருது பெற்ற இந்திய திரைபிரபலங்கள் யார் யார் ?

* சிறந்த அறிமுக நடிகை: கவுஷாலி குமார் (தோகா அரவுண்ட் தி கார்னர்)

* சிறந்த பின்னணி பாடகி: ஷ்ரேயா கோஷல் (ரங் ரஸியா - பிரம்மாஸ்திரா)

* சிறந்த பின்னணி பாடகர்: அர்ஜித் சிங் (கேஸாரியா - பிரம்மாஸ்திரா)

* சிறந்த பாடல் வரிகள் : அமிதாப் பட்டாச்சார்யா, கேசரியா, பிரம்மாஸ்திரம் பகுதி ஒன்று: சிவா

* சிறந்த இசை : ப்ரீதம் சக்ரவர்த்தி, பிரம்மாஸ்திரம் பகுதி ஒன்று: சிவா

banner

Related Stories

Related Stories