சினிமா

‘காலா’ பட நடிகையின் ஹாலிவுட் என்ட்ரி : ட்ரெய்லர் வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்ஃப்ளிக்ஸ்!

தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தற்போது ஹாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார்.

‘காலா’ பட நடிகையின் ஹாலிவுட் என்ட்ரி : ட்ரெய்லர் வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்ஃப்ளிக்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியில் பல படங்களில் நடித்தவர் ஹூமா குரேஷி. மம்மூட்டியின் `ஓய்ட்' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த `காலா' படம் மூலமாக தமிழ் சினிமாவிலும் கால் பதித்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஹூமா, தற்போது ஒரு மிகப்பெரிய ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார் என்பதுதான் அவரைப் பற்றிய சமீபத்திய செய்தி. இந்திய நட்சத்திரங்கள் ஹாலிவுட் படங்களில் நடிப்பது புதிதல்லை. ஹூமாவும் இதற்கு முன்பு `viceroy's house' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் எல்லோரிடத்திலும் பரிட்சயமான படமில்லை.

ஆனால் தற்போது, அவர் நடித்திருக்கும் படம் உலக அளவில் கவனம் குவித்த ஒரு இயக்குநரின் படம். சினிமா ரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு படம். ஜஸ்டிஸ் லீக் மூலம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஸேக் ஸ்னைடர் இயக்கத்துல உருவாகியிருக்கும் `ஆர்மி ஆஃப் டெட்' படம்தான் அது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்கு என ஸ்பெஷலாக ஸேக் ஸ்னைடர் இயக்கியிருக்கும் படம்தான் இது.

ஸோம்பி களத்திற்குள் நடக்கும் ஒரு ஹைஸ்ட் படமாக உருவாகியிருக்கிறது. Dave Bautista, Ella Purnell, Omari Hardwick, Ana de la Reguera, Theo Rossi, Matthias Schweighöfer, Nora Arnezeder, Hiroyuki Sanada, Tig Notaro, Raúl Castillo, Samantha Win, Michael Cassidy, Richard Cetrone, and Garret Dillahunt ஆகிய ஹாலிவுட் பிரலங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஹூமா குரேஷியும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.

தற்போது இந்தப் படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் மே 21ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories