சினிமா

விஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விஜய் 64 படக்குழு திட்டம் - ‘Master’ லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய்யின் ‘மாஸ்டர்’ பட செகண்ட் லுக் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விஜய் 64 படக்குழு திட்டம் - ‘Master’ லேட்டஸ்ட் அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய்யின் 64வது படமான ‘மாஸ்டர்’ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில், வில்லனாக விஜய் சேதுபதியும், நாயகியாக மாளவிகா மோகனனும் நடிக்கின்றனர்.

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் சென்னை, டெல்லி, கர்நாடகா என படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், சாந்தனு, விஜே ரம்யா கவுரி கிஷன் என பலர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. ஷூட்டிங் தொடங்கிய நாள் முதல் படம் தொடர்பான வேறெந்த அறிவிப்புகளும் வெளியிடாமல் இருந்ததால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதே ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இருப்பினும், ‘மாஸ்டர்’ படத்தின் 2 மற்றும் 3வது போஸ்டர் குறித்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விஜய் 64 படக்குழு திட்டம் - ‘Master’ லேட்டஸ்ட் அப்டேட்!

அது என்னவெனில், ‘மாஸ்டர்’ படத்தின் 2வது போஸ்டர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இடம்பெற்றிருப்பது போன்று வருகிற ஜனவரி 16ம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சிறப்பம்சம் என்னவென்றால் ஜனவரி 16ம் தேதி விஜய் சேதுபதியின் பிறந்தநாள் என்பதால் அன்றே மாஸ்டர் செகண்ட் லுக்கை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories