சினிமா

’தபாங் 3 வசூலை விட, நாட்டு மக்களின் உரிமையே முக்கியம்’ : போராட்டம் குறித்து பாலிவுட் நடிகை கருத்து !

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடும் மக்களுடன் நான் இருக்கிறேன் என பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி கூறியுள்ளார்.

’தபாங் 3 வசூலை விட, நாட்டு மக்களின் உரிமையே முக்கியம்’ : போராட்டம் குறித்து பாலிவுட் நடிகை கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'தபாங் 3'. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாகியுள்ளது.

படம் வெளியான முதல் நாள் அனைத்து மொழிகளிலுமே ரூ.24.50 கோடியே வசூலித்துள்ளது. இது படக்குழுவுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தனியார் அறக்கட்டளை சார்பில் மும்பையில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவிடம் படத்தின் வசூல் குறைந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

’தபாங் 3 வசூலை விட, நாட்டு மக்களின் உரிமையே முக்கியம்’ : போராட்டம் குறித்து பாலிவுட் நடிகை கருத்து !

இதற்கு பதிலளித்த சோனாக்‌ஷி சின்ஹா, “எது முக்கியம் என மக்களுக்கு நன்றாகவே தெரியும் என நினைக்கிறேன். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், ரசிகர்கள் தபாங் 3 படத்தை பார்த்துள்ளது மகிழ்ச்சி. திரைப்பட வசூலை விட மக்களின் போராட்டம்தான் முக்கியமானது” என்றார்.

அதைத் தொடர்ந்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து கேட்டபோது, “மக்களின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது. பொது வெளியில் மக்கள் போராடுவதை உணர்கிறேன். நான் இந்த நாட்டு மக்களுடன் இருக்கிறேன்” என சோனாக்‌ஷி கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories