சினிமா

இதுதான் ‘விஜய் 64’ படத்தின் கதையா? - இணையத்தில் ‘லீக்’ ஆனதாக தகவல்!

விஜய்யின் ‘தளபதி 64’ படத்தின் கதை இணையத்தில் லீக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘மாநகரம்’, ‘கைதி’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார்.

இதுதான் ‘விஜய் 64’ படத்தின் கதையா? - இணையத்தில் ‘லீக்’ ஆனதாக தகவல்!

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை XB Film creators நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சேத்தன், ஸ்ரீமன் என பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இதுதான் ‘விஜய் 64’ படத்தின் கதையா? - இணையத்தில் ‘லீக்’ ஆனதாக தகவல்!

படத்தின் முதற்கட்ட படபிடிப்புகள் சென்னையில் முடிந்துவிட்ட நிலையில், தற்போது டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டுக்கு இடையே விஜய் 64 படத்தின் ஷூட்டிங் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் விஜய் சேதுபதி ஷூட்டிங்கில் பங்குகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இதுதான் ‘விஜய் 64’ படத்தின் கதையா? - இணையத்தில் ‘லீக்’ ஆனதாக தகவல்!

அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் கதை இணையத்தில் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதான் ‘விஜய் 64’ படத்தின் கதையா? - இணையத்தில் ‘லீக்’ ஆனதாக தகவல்!

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதை மையமாக வைத்து தற்போதைய கல்வி முறையை சாடும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளதாக தகவல் உலா வருகிறது.

இதுதான் ‘விஜய் 64’ படத்தின் கதையா? - இணையத்தில் ‘லீக்’ ஆனதாக தகவல்!

ஆனால் இது தொடர்பாக படக்குழு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், படத்தில் நடிகர் விஜய் கல்லூரி மாணவர் போன்ற தோற்றத்தில் நடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories