#CAA2019

சென்னையில் இன்று மாபெரும் “குடியுரிமை பாதுகாப்பு மாநாடு” - மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு!

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று மாபெரும் ‘குடியுரிமை பாதுகாப்பு மாநாடு’ நடைபெறவுள்ளது.

mk stalin
twitter mk stalin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராக சென்னையில் "குடியுரிமை பாதுகாப்பு மாநாடு" இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய அரசியலமைப்புக்கும், மதச்சார்பின்மைக்கும் விரோதமாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர் ஆகிவற்றின் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்தரங்கங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், "தமிழக மக்கள் ஒற்றுமை மேடை" சார்பில் ‘குடியுரிமை பாதுகாப்பு மாநாடு’ சென்னையில் இன்று நடைபெறுகிறது.

சென்னை ராயப்பேட்டை YMCA திடலில் மாலை 4.30 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார்.

சென்னையில் இன்று மாபெரும் “குடியுரிமை பாதுகாப்பு மாநாடு” - மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இந்து குழுமத்தின் என்.ராம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்ற உள்ளனர்.

banner

Related Stories

Related Stories