#CAA2019

’மாணவர்களின் போராட்டம் குறித்து கருத்து சொல்லும் ரஜினிக்கு இது தெரியுமா?!’ - டெல்லியில் இருந்து ஒரு குரல்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் தேவையற்ற போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என ரஜினிகாந்த் கூறியதற்கு JNU மாணவர் பேரவைத் தலைவர் ஆயிஷி கோஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

’அனைவருக்குமான கல்வியை உறுதிப்படுத்த வேண்டும், கல்வியில் தனியார்மயத்தை அனுமதிக்கக்கூடாது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் ஆயி,ஷி கோஷ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கல்வி உரிமைகளை நசுக்கும் எந்த முயற்சியையும் எதிர்த்துப் போராட எல்லா உரிமையும் எங்களுக்கு உண்டு. கல்வி என்பது விற்கப்படும் வியாபார பண்டமல்ல. அது ஒவ்வொருடைய உரிமை என கூறினார்.

’மாணவர்களின் போராட்டம் குறித்து கருத்து சொல்லும் ரஜினிக்கு இது தெரியுமா?!’ - டெல்லியில் இருந்து ஒரு குரல்

மேலும், மாணவர்களாகிய நாங்கள் இந்த சமூகத்தில் வளர்ந்து வரும் நிலையில், ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்தில் இந்தியா அடிமை பெற்று இருந்ததை போல நாங்களும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. சவார்க்கர், கோல்வாக்கர் அவர்களுடைய வழித்தோன்றல்கள் கூறக்கூடிய தேசியத்தை நாங்கள் ஏற்கவும் விரும்பவில்லை’ என குறிப்பிட்டார்.

மாணவர்கள் போராடக் கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ’அரசியலமைப்பையும் கல்வியையும் அம்பேத்கர், பகத்சிங் வழி நின்று பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு என்பதை நடிகர் ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டும்’ என ஆயிஷி கோஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories