#CAA2019

ஜாமியா பல்கலை சேதம் : ரூபாய் 2.66 கோடி இழப்பீடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!

பல்கலைக்கழகம் மீது அராஜக தாக்குதல் நடத்தியதற்கு இழப்பீடு கேட்டு மத்திய அரசுக்கு ஜாமியா பல்கலைக்கழக நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தை குலைப்பதற்காக பா.ஜ.கவினர் இந்துத்வா கும்பலை ஏவி மாணவர்கள் மீது தாக்குதலை நடத்தியது. இதில், பல மாணவர்கள் படுகாயங்களுக்கு ஆளாகினர். மேலும் பல்கலைக்கழகங்களில் உள்ள வகுப்பறை, நூலகத்தை சேதப்படுத்தி, சி.சி.டி.வி கேமராக்களை உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜாமியா பல்கலை சேதம் : ரூபாய் 2.66 கோடி இழப்பீடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!

இந்தத் தாக்குதல் நடைபெற்று ஒருமாதத்திற்குப் பிறகு போலிஸார் மாணவர்களை திட்டமிட்டு தாக்கும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த பல மாணவர்களை, போலிஸார் லத்தியால் தாக்குவது பதிவாகியுள்ளது. போலிஸார் முகமூடி அணிந்திருந்ததால் அவர்களின் முக அடையாளங்கள் தெரியவில்லை.

போலிஸாரின் மிருகத்தனமான தாக்குதலை பலரும் கண்டித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ஜாமியா பல்கலைக்கழக நூலகம், வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்களை தாக்கி, பல்கலைக்கழகத்தை சேதப்படுத்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு இழப்பீடு வழங்க மத்திய அரசிடம் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுள்ளது.

அதன்படி, நூலகம், வகுப்பறைகள், வளாகம், ஜன்னல், நாற்காலிகள், கண்ணாடி கதவுகள், மேஜைகள் என அனைத்தையும் டெல்லி போலிஸார் சேதப்படுத்தியதால் 2 கோடியே 66 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு ஜாமியா பல்கலைக்கழக நிர்வாகம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, டெல்லி போலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளான முதுகலை மாணவர் முகமது முஸ்தபா என்பவர், காவல்துறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த முகமது ரூ.1 கோடி இழப்பீடு கேட்டுள்ளார்.

ஜாமியா பல்கலை சேதம் : ரூபாய் 2.66 கோடி இழப்பீடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!

தான் எந்தப் போராட்டத்திலும் பங்கேற்காத போதிலும் போலிஸாரின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறேன். ஆகவே போலிஸார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதோடு, தாக்கப்பட்ட தனக்கு இழப்பீடும் வழங்கவேண்டும் என மாணவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories