#CAA2019

இஸ்லாமியரின் தொப்பியை அணிந்து மோடிக்கு பதிலடி கொடுத்த சுவாமி அக்னிவேஷ் - CAA போராட்டத்தில் ருசிகரம்!

என்னுடையை தலைப்பாகையை அணிவதால் இஸ்லாமியர் ஒருவர் இந்துவாகி விட முடியாது என ஆடை குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சுவாமி அக்னிவேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டில் மதரீதியாக பிளவை உண்டாக்கும் வகையில் பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்க, தன்னுடைய குண்டர்களை ஏவி போராட்டக்காரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது பாசிச பா.ஜ.க அரசு.

இருப்பினும், உரிமையை நிலைநாட்டவும், பாதுகாக்கவும் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றியுள்ளன.

இஸ்லாமியரின் தொப்பியை அணிந்து மோடிக்கு பதிலடி கொடுத்த சுவாமி அக்னிவேஷ் - CAA போராட்டத்தில் ருசிகரம்!

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று கேரளாவின் கண்ணூரில் “அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்” என்ற பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதில், ஹரியானாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஆரிய சமாஜ் அறிஞருமான சுவாமி அக்னிவேஷ் பங்கேற்று மக்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், மதச்சார்பின்மையை போற்றும் கேரளாவின் இந்த நிலைப்பாடு இந்தியாவுக்கே சிறந்த உதாரணம் எனக் குறிப்பிட்டார். மேலும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்காக கேரள அரசுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

உடுத்தியிருக்கும் உடையை வைத்து வன்முறை பரப்புவோரை அடையாளம் காணலாம் என பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன்னுடைய தலைப்பாகையை முஸ்லிம் லீக் தலைவர் மெளலவிக்கு அணிவித்து, அவருடைய தொப்பியை வாங்கி சுவாமி அக்னிவேஷ் அணிந்துகொண்டு பரஸ்பர அன்பை வெளிப்படுத்தினார்.

மேலும், தொப்பி அணிவதால் நான் முஸ்லிமாகவோ, தலைப்பாகை அணிவதால் அவர் இந்துவாகவோ மாறிவிடப் போவதில்லை. இதில் யார் வன்முறை செய்கிறார் என்பதை நீங்களே நிரூபியுங்கள் என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பினார்.

இஸ்லாமியரின் தொப்பியை அணிந்து மோடிக்கு பதிலடி கொடுத்த சுவாமி அக்னிவேஷ் - CAA போராட்டத்தில் ருசிகரம்!

இதனைத் தொடர்ந்து, “பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அரசியலமைப்புக்கும், ஆன்மிகத்துக்கும் எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள். இந்தியா அனைத்து மதத்தினருக்குமான வாசலாக உள்ளது. இந்துத்வா கொள்கை இந்தியாவுக்கு எதிரியாகும்” என சுவாமி அக்னிவேஷ் பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories