#CAA2019

படித்துக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கிய பா.ஜ.க குண்டர்கள் : ஜாமியா மாணவர்கள் வெளியிட்ட CCTV காட்சி !

சிஏஏக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் குண்டர்கள் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது.

மாணவர்கள் இஸ்லாமிய மக்களுடன் இணைந்து பா.ஜ.க அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 14ம் தேதி அமைதியாக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் மதவாத கும்பலை ஏவி வன்முறைக்களமாக மாற்றியது மத்திய மோடி அரசு.

இந்தச் சம்பவம், டெல்லி மட்டுமல்லாமல் இந்தியாவையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஜாமியா மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு, காவல்துறையினரும், இந்துத்வா கும்பலும் கூட்டுச் சேர்ந்து மாணவர்களை கண்மூடித் தனமாக தாக்கி, பல்கலைக்கழகத்தில் இருந்த வகுப்பறை, நூலகம், கழிவறை என ஒன்றையும் விட்டுவைக்காமல் அடித்து துவம்சம் செய்தனர்.

இதுமட்டுமல்லாமல், தொடர்ந்து போராடிய மாணவர்கள் மீது போலிஸார் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர். இதனால் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். மக்களின் உரிமைக்காக ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டத்தை மோடி அரசு நிகழ்த்தியது.

இதன் மூலம் மத்திய பா.ஜ.க அரசின் பாசிசமும், மதவாத வெறியும் எத்தகையது என்பது மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டப்பட்டது.

படித்துக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கிய பா.ஜ.க குண்டர்கள் : ஜாமியா மாணவர்கள் வெளியிட்ட CCTV காட்சி !

டிசம்பர் மாதம் ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நூலகங்கள், வகுப்பறைகளில் காவல்துறையினரை போல சீருடை அணிந்து தாக்குதலில் ஈடுபட்ட இந்துத்வா கும்பலின் செயல்கள் சி.சி.டி.வி காட்சி மூலம் பட்டவர்த்தனமாகியுள்ளது.

அதில், ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் அமைதியாக படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது பாதுகாப்பு படையினரை போல வந்த குண்டர்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்து அச்சுறுத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சீருடையில் வந்து மாணவர்களை துன்புறுத்திய பயங்கரவாதிகளின் கொடூர செயல்களை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என ஜாமியா மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக காங்கிரஸின் பிரியங்கா காந்தி, சசி தரூர் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை என அப்பட்டமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பொய்யுரைத்து வருகிறார் என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories