#CAA2019

3வது நாளாக தொடரும் இஸ்லாமியர்களின் உரிமைக் குரல்.. தேசியக் கொடியை ஏந்தி இரவு பகலாக தமிழகத்தில் போராட்டம்!

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் போராட்டம் நீடிக்கும் என இஸ்லாமியர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாசிச கொள்கைகளை பின்பற்றும் பா.ஜ.க. அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிராக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, கூடுதலாக என்.சி.ஆர்., என்.பி.ஆர். போன்ற சட்டங்களையும் கொண்டு வந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அசாமில் தொடங்கிய மக்கள் போராட்டம் டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் இஸ்லாமிய பெண்கள் இரு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3வது நாளாக தொடரும் இஸ்லாமியர்களின் உரிமைக் குரல்.. தேசியக் கொடியை ஏந்தி இரவு பகலாக தமிழகத்தில் போராட்டம்!

போராட்டத்தை கலைக்க வன்முறையை ஏற்படுத்த மத்திய பா.ஜ.க தனது மதவாத குண்டர்களை ஏவி பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டது. ஆனால் அவை அனைத்தையும் எதிர்கொண்டு மக்கள் இதுகாறும் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையின் வண்ணாரப்பேட்டை பகுதியில், நேற்று முன் தினம் இரவு குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஏராளமான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போராட்டக்காரர்கள் மீது எடப்பாடி அரசின் காவல்துறை தடியடி தாக்குதலில் ஈடுபட்டது.

இதனால் கொதித்தெழுந்த இஸ்லாமிய அமைப்புகள், சென்னையில் தொடங்கிய போராட்டம், தமிழகத்தின் இண்டு இடுக்கெங்கும் விடிய விடிய நடைபெற்று வருகிறது. போலிஸாருக்கு கண்டனம் தெரிவித்தும், குடியுரிமை சட்டத்தையும், என்.பி.ஆர் நடைமுறைகளையும் தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி இஸ்லாமியர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

இரவு பகலாக தொடரும் இந்த போராட்டம் 3வது நாளாக நீடித்து வருகிறது. இதில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். மேலும், போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் என அனைத்தும் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டும் வருகிறது.

banner

Related Stories

Related Stories