#CAA2019

“மதவாத ஆட்சியை எதிர்க்கும் துணிவில்லாத அரசு எடப்பாடி அரசு” - தி.மு.க எம்.பி ஆ.ராசா விமர்சனம்!

நெல்லையில் குடியுரிமை சட்டத்தைக் கண்டித்து தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்துகொண்டு பேசினார்.

“மதவாத ஆட்சியை எதிர்க்கும் துணிவில்லாத அரசு எடப்பாடி அரசு” - தி.மு.க எம்.பி ஆ.ராசா விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்தியில் ஆளும் மதவாத ஆட்சியை எதிர்க்கும் துணிவில்லாத ஆட்சியே தமிழகத்தில் நடைபெற்று வருகிறது என தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

நெல்லை மேலப்பாளையத்தில் தி.மு.க சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க எம்.எல்.ஏ மைதீன்கான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் லஷ்மணன், மாவட்டச் செயலாளர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

“மதவாத ஆட்சியை எதிர்க்கும் துணிவில்லாத அரசு எடப்பாடி அரசு” - தி.மு.க எம்.பி ஆ.ராசா விமர்சனம்!

அப்போது மக்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றிய ஆ.ராசா, “நாட்டில் மதவாத ஆட்சி நடக்கிறது. இதனை எதிர்க்க திராணி இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. நாட்டின் மதச்சார்பின்மையை காக்க நாம் அனைவரும் உறுதியுடன் இருக்கவேண்டும்.

இந்திய அரசியலமைக்கும் இறையான்மைக்கும் எக்காலத்திலும் பாதுகாப்பாக இருக்கும் இயக்கம் தி.மு.க. ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற மகத்தான பண்பு எனக்கும் என்னுடைய இயக்கத்திற்கும் இருக்கிறது எனச் சொல்லி ஆட்சியை இழந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.” என அவர் பேசினார்.

banner

Related Stories

Related Stories