#CAA2019

NRC பணிகளை மேற்கொண்டால் நடவடிக்கை : மே.வங்கத்தை தொடர்ந்து கேரள அரசு அதிரடி!

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூறிய கேரள அரசு தற்போது என்.ஆர்.சிக்கு எதிராக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளது.

 NRC பணிகளை மேற்கொண்டால் நடவடிக்கை : மே.வங்கத்தை தொடர்ந்து கேரள அரசு அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பாஜக அரசின் குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு அலை ஓங்கி வருகிறது. கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்களே இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான எந்த பணிகளும் நடைபெறாது என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அம்மாநில அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது.

ஏற்கெனவே குடியுரிமை சட்டத்திருத்தத்தை அமல்படுத்தப் போவதில்லை என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தையும் அமல்படுத்தப்போவதில்லை என கேரள அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, கேரளாவின் பொது நிர்வாகத்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் விடுத்துள்ள சுற்றறிக்கையில், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்ந்த எந்த பணிகளும் நடைபெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாநில அரசின் இந்த உத்தரவை மீறும் அதிகாரைகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மேற்கு வங்க மாநிலத்திலும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories