#CAA2019

CAA, NRC சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட கல்லூரி மாணவர்களைக் கைது செய்த எடப்பாடியின் ’ஏவல்’ காவல்துறை

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய கோலம் போட்டதற்காக போலிஸார் கல்லூரி மாணவிகளைக் கைது செய்துள்ளனர்.

CAA, NRC சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட கல்லூரி மாணவர்களைக் கைது செய்த எடப்பாடியின் ’ஏவல்’ காவல்துறை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரைந்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததற்காக காவல்துறையினர் கல்லூரி மாணவிகளை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் பா.ஜ.க.,வின் குடியுரிமை சட்டம் மற்றும் NRCக்கு எதிராக போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இதற்காக தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கல்லூரி மாணவிகள் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த சாஸ்திரி நகர் காவல்துறையினர் மாணவிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர், மாணவ, மாணவிகள் 6 பேரை வலுக்கட்டாயமாக போலிஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலிஸார் கைது செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், மாணவர் ஒருவரிடம், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி,அதிகார தொணியில் பேசியது மாணவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக ஒரு வேன் முழுக்க போலிஸ் படையைக் கூட்டி வந்து அப்பகுதியில் இருந்தவர்களை மிரட்டியுள்ளது காவல்துறை. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள சமூக நலக் கூடத்தில் போலிஸ் அடைத்து வைத்தனர்.

மாணவ, மாணவிகள் கைது செய்யப்படும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதோடு, காவல்துறையின் அராஜக செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்து அப்பகுதியில் கூடத் தொடங்கியதால், கைதானவர்களை போலிஸார் விடுவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories