#CAA2019

CAA_NRCக்கு எதிராக போராட்டம்: 50,000 பேர் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு!

உரிமைக்காக போராடிய இத்தனை பேர் மீது தமிழகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CAA_NRCக்கு எதிராக போராட்டம்: 50,000 பேர் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 50 ஆயிரம் பேர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இஸ்லாமிய, தமிழ் உள்ளிட்ட பல அமைப்புகள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்று எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், ஆளும் அதிமுக அரசோ, மக்களின் அறவழி போராட்டங்களை கொச்சைப்படுத்துவதோடு, காவல்துறையை ஏவி போராட்டத்தை ஒடுக்க எடப்பாடி அரசு அடக்குமுறையை கையாண்டு வருகிறது.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகளை பதிந்து வருகிறது எடப்பாடி அரசின் காவல்துறை. இதுவரையில், 50,000 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஒரு சமூக பிரச்னைக்காக குரல் கொடுத்த இத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்வதே தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும்.

மேலும், பாஜக அரசின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு அடக்குமுறையை கையாள்கிறது என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories