#CAA2019

CAA, NRC & NPR - பணமதிப்பிழப்பை விட அபாயகரமானது: ராகுல் காந்தி பேட்டி!

தேசிய மக்கள்தொகை பதிவேடும், தேசிய குடியுரிமை பதிவேடும் அடுத்த பணமதிப்பிழப்பு போன்றது என்று ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட 135ஆம் ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு முன்னாள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “மத்திய பா.ஜ.க அரசின் தேசிய மக்கள்தொகை பதிவேடும், தேசிய குடியுரிமை பதிவேடும், நாட்டு மக்கள் மீதான இரண்டாவது பணமதிப்பு நீக்கம் போன்றது.” என்று குற்றஞ்சாட்டினார்.

பணமதிப்பிழப்பு நீக்கத்தின்போது நாட்டு மக்கள் சந்தித்த பாதிப்புகளைவிட, கூடுதல் பிரச்சனைகளை தற்போது கொண்டு வந்துள்ள என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. ஏற்படுத்தக்கூடியது என்று விமர்ச்சித்தார்.

நாட்டில் உள்ள ஏழை மக்கள் அனைவரையும் மத்திய அரசு இந்தியர்களாக நினைக்கிறதா இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும், பிரதமர் மோடியின் 15 பணக்கார நண்பர்களுக்கான செயல்பாடுகளாக உள்ளது என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.

banner

Related Stories

Related Stories