#CAA2019

#CAA மங்களூரு வன்முறை : துப்பாக்கிச்சூட்டில் பலியான இருவருக்கான இழப்பீடு வாபஸ் - எடியூரப்பா சொன்ன காரணம்?

மங்களூருவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

#CAA மங்களூரு வன்முறை : துப்பாக்கிச்சூட்டில் பலியான இருவருக்கான இழப்பீடு வாபஸ் - எடியூரப்பா சொன்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவின் மங்களூருவில் கடந்த டிசம்பர் 19ம் தேதி போராட்டம் நடைபெற்றது.

அப்போது போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்களான ஜலீல் குத்ரோலி மற்றும் நெளஷீன் ஆகிய இருவர் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

போலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இருவருமே போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் என்பதால் கர்நாடக மக்களிடையே இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்குவதாக எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு அறிவித்தது.

#CAA மங்களூரு வன்முறை : துப்பாக்கிச்சூட்டில் பலியான இருவருக்கான இழப்பீடு வாபஸ் - எடியூரப்பா சொன்ன காரணம்?

இந்நிலையில், மங்களூருவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை தொடர்பாக சித்தராமையா தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் குற்றப்பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் போலிஸாரை தாக்கியவர்கள் என கூறப்படுவதால் அவர்களுக்கான இழப்பீடு நிறுத்திவைக்கப்படுவதாகவும், விசாரணைக்குப் பின்பே முடிவெடுக்கப்படும் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார். இது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலிஸை வைத்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதுமல்லாமல், போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்துவதுடன் அப்பாவி மக்களை கொன்று குவித்து தற்போது அவர்கள் மீது எடியூரப்பா அரசு வீண்பழி சுமத்துவதற்கு கண்டனம் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories