உலகம்
இந்திய வீரருடன் விண்ணில் ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட் : சர்வதேச விண்வெளி மையத்தில் 14 நாட்கள் ஆய்வு!
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 வீரர்களுடன் பால்கன்-9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ - நாசா - ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்ய மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் கடந்த 11ம் தேதி செயல்படுத்தப்பட இருந்தது.
ஆனால், மோசமான வானிலை, ஆக்சிஜன் கசிவு உள்ளிட்ட பல்வேறு கோளாறு காரணமாக அடுத்தடுத்து 6 முறை ராக்கெட் ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து இன்று புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலமாக டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்த ராக்கெட் நாளை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும். 4 வீரர்களும் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்யவுள்ளனர். இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா , ஹங்கேரி, போலந்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
1984-ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ராகேஷ் சர்மா பெற்றிருந்தார். இவர் சோவியத் யூனியனின் உதவியோடு சோயுஸ் விண்கலம் மூலமாக ராகேஷ் சர்மா 1984-ல் முதன்முறையாக விண்வெளிக்குச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, ராகேஷ் சர்மாவுக்குப் பின் 40 ஆண்டுகள் கழித்து இந்தியா சார்பில் சுபான்ஷூ சுக்லா விண்வெளிக்குச் செல்கிறார்.
Also Read
-
”இந்திய நீதித்துறையை அச்சுறுத்துவதற்காக வீசப்பட்ட காலணி” : கி.வீரமணி கடும் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி, மேம்பாட்டு மையமாக மாற்ற வேண்டும்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
-
கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : இரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு!
-
பட்டியலின இளைஞர் கொலை : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ்!
-
”தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்” : ஆர்.என்.ரவி கேள்விக்கு நெத்தியடி பதில் தந்த முரசொலி!