உலகம்

அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயணிகள் விமானம் - ராணுவ ஹெலிகாப்டர்... 60 பேரின் நிலை என்ன ?

பம்பார்டியர் சிஆர்ஜே 700 என்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனம் அமெரிக்காவின் கன்சாஸ் நகரின் விசிட்டா பகுதியிலிருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் ரீகன் தேசிய விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது இந்திய நேரப்படி காலை 7.30 மணியளவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு வர்ஜீனியாவில் உள்ள பெல்வாய்ர் என்ற இடத்திலிருந்து புறப்பட்ட சிக்கோர்ஸ்கி எச்-60 என்ற ராணுவ ஹெலிகாப்டர் பயணிகள் விமானத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் தற்போது வரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், விமானம் மற்றும் ஹெலிகாப்ட்டரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த விமானத்தில் இருந்தவர்கள் பலர் அங்குள்ள போடோமேக் ஆற்றில் விழுந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தண்ணீரில் குதித்து தேடக்கூடிய காவலர்களும், காவல் படகுகளும் பல மணி நேரங்களாக மீட்புப் பணியை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) தெரிவித்துள்ளது.

Also Read: இஸ்ரேல் - பலஸ்தீன போர் : மேலும் 11 பிணைக்கைதிகள் விடுவிப்பதாக ஹாமாஸ் அறிவிப்பு !