உலகம்
பப்புவா நியூ கினியா நிலச்சரிவு : மண்ணில் புதைந்த 650க்கும் மேற்பட்ட பொதுமக்கள் !
தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டில் தலைநகரான போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே 600கிமீ (370 மைல்) தொலைவில் உள்ள மலைப்பகுதில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மிகபெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
யம்பலி என்ற மலைப்பகுதி கிராமத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 150 வீடுகள் மண்ணில் புதைத்தன.இந்த வீடுகளில் 700க்கும் மேற்பட்டோர் இருந்ததாக மதிப்பிடப்பட்ட நிலையில், உயிரிழப்பு கடுமையாக அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டது.
இந்த பேரிடரைத் தொடர்ந்து மீட்பு பணியில் ராணுவத்தினர் மற்றும் மீட்பு படையினர் மீட்புப்பணியில் களமிறக்கப்பட்டனர். இந்த விபத்தில் மண்ணில் சிக்கிய சிலர் முதல் நாளிலேயே மீட்கப்பட்ட நிலையில், மீட்கப்படாத அனைவரும் உயிரிழந்திருக்கவே வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
அந்த வகையில் இந்த விபத்தில் 670-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் 6 முதல் 8 மீட்டர் (20 முதல் 26 அடி) ஆழ இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு வருவதாக மீட்புப்படையினர் கூறியுள்ளனர்.
இந்த விபத்தின் மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகள் உறுதி அளித்துள்ளன. நிலச்சரிவு காரணமாக சுற்றியுள்ள பகுதிகளில் 1250க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 250 வீடுகள் மக்களால் கைவிடப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!