உலகம்
"செயற்கை நுண்ணறிவுவால் எதிர்காலத்தில் யாருக்கும் எந்த வேலையும் இருக்காது" - எலான் மஸ்க் எச்சரிக்கை !
மனிதனின் பரப்பரப்பான வாழ்வில் தனக்கான வசதிகள் நிறைந்த வாழ்விற்காக, உதவ பலவிதமான தொழில்நுட்பங்களை உருவாக்கி இருக்கின்றனர். அதில் மிக முக்கியமானதும் தவிர்க்க முடியாததுமாக இருக்கும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் தொழில்நுட்பம்.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமீபத்திய ஆண்டுகளில் பல மடங்கு முன்னேறியுள்ளது, தற்போதைய நிலையில், செயற்கை நுண்ணறிவு செயலிகள் பல மடங்கு பெருகியுள்ளன. எனினும் இந்த தொழில்நுட்பம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் யாருக்கும் எந்த வேலையும் இருக்காது என பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எதிர்கால உலகமே மாறிவிடும்.
எதிர்காலத்தில் நம் யாருக்குமே வேலை இருக்காது. அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு பார்த்துக்கொள்ளும். எதிர்காலத்தில் நீங்கள் வேலை பார்க்க விரும்பினால் மட்டுமே பார்க்கலாம். வேலை என்பது ஒருவித பொழுதுபோக்கு அம்சமாகிவிடும்.
எனினும் நான் அப்போதும் மனிதர்கள் பங்களிப்பு இருக்கும் என நம்புகிறேன். கணினியும், ரோபோக்களும் செயற்கை நுண்ணறிவாழ் நம்மைவிட வேலைகளை சிறப்பாகச் செய்யும் என்றால் நம் பங்கு என்னவாக இருக்கும் எந்த கேள்வி எழுகிறது. எனினும் நாம் இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்போம் என நம்புகிறேன்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!