உலகம்
ரஷ்யாவின் முக்கிய கப்பல் மூழ்கடிப்பு: உக்ரைனின் பதிலடியால் அரண்டு நிற்கும் புதின்... மாறுமா போரின் நிலை ?
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது.
இந்த போரில் சில நாட்களுக்கு முன்னர் பல மாதங்கள் தொடர் முற்றுகைக்கு பின்னர் உக்ரைனின் அவ்டிவ்கா நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. இதன் காரணமாக ரஷ்யா மீதான தாக்குதலை உக்ரைன் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவின் முக்கிய ரோந்து கப்பலை உக்ரைன் தாக்கி மூழ்கடித்துள்ளது.
ரஷ்யாவின் கெர்ச் ஜலசந்தி அருகே அந்நாட்டுக்கு சொந்தமான 'ப்ராஜெக்ட் 22160' எனும் ரோந்து கப்பல் சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது உக்ரைன் அனுப்பிய ஆளில்லா ட்ரோன் ஒன்று ரோந்து கப்பலில் மோதியதில் அந்த கப்பல் கடும் சேதமடைந்து, கடலில் மூழ்கியது. இந்த தாக்குதல் குறித்த விவரங்களை உக்ரைன் வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்து ரஷ்யா தரப்பில் எந்த பதிலும் கூறப்படவில்லை.
ரூ.538 கோடி மதிப்புள்ள இந்த ரோந்து கப்பல், கருங்கடலில் ரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த வகை போர்க்கப்பல் ரஷ்யாவிடம் மொத்தம் 4 இருந்த நிலையில், அதில் இரண்டு கப்பல்களை உக்ரைன் மூழ்கடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!