உலகம்
உலகிலேயே அரிதான நோய்... ‘குளித்தால் அலர்ஜி’... 22 வயது இளம்பெண்ணின் பரிதாப நிலை !
இந்த உலகில் பலவகையான உயிரினங்கள் உள்ளது. அதேபோல் பலவகையான நோய்களும் இருக்கிறது. அதில் பெரும்பாலானவை அனைவருக்கும் வரும் காய்ச்சல், சளி, தலைவலி போன்ற சாதாரணமானவையாகும். மேலும் சிலருக்கு புற்றுநோய், எய்ட்ஸ் என நோய்கள் இருக்கும். இதில் சிலவற்றை குணமாக்க முடியும்; சில முடியாது.
ஆனால் இதைவிட அரியவகை நோய்கள் என்று கணக்கெடுத்தால் தனியாக பட்டியலே இடலாம். அப்படித்தான் நடிகை சமந்தா, மம்தா மோகன்தாஸ், பூனம் கவுர் என அதிகமான நடிகைகள் தாங்கள் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அண்மையில் கூட பெண் ஒருவரால் சிறுநீர் கழிக்க முடியாமல் தவித்து வருகிறார். இந்த சூழலில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு தண்ணீர் அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள தெற்கு கரோலினா பகுதியில் லோரன் மான்டிஃபுஸ்கோ (Loren Montefusco) என்ற 22 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு தண்ணீர் அலர்ஜி இருப்பது தெரியவந்துள்ளது. லோரனுக்கு அவரது 12-வது வயதில் இதன் தாக்கம் தெரியவந்துள்ளது. ஆனால் முதலில் அதனை சிறிய விஷயமாக எண்ணி, தற்காலிக மருத்துவ உதவி எடுத்து வந்துள்ளார்.
இதையடுத்தே சுமார் 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மருத்துவரை அணுகியபோது இவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வினோதமான அரிதான அலெர்ஜி இருப்பது தெரியவந்தது. Aquagenic urticaria என சொல்லப்படும் அந்த அலெர்ஜியானது, உலகிலேயே ஏறத்தாழ 40 பேருக்குதான் இருக்கிறதாம். இதனால் இவர் குளிப்பதால் சிரமத்தை சந்தித்துள்ளார்.
ஒரு இளம்பெண்ணாக இதனை எதிர்கொள்வதில் மிகவும் சிரமம் இருப்பதாக கூறும் இவர், இதற்காக விரைவாகவே குளித்து விட்டு வெளியே வரும் நிலை உள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சில நொடிகள் அதிகமாக குளித்தாலும் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு எரிச்சல் ஏற்படுவதாக கூறியுள்ளார். இந்த அலெர்ஜிக்கு இன்னும் மருந்து கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!