உலகம்
ரூ.3.32 லட்சத்தை விழுங்கிய வளர்ப்பு நாய்... கதறிய இளம்பெண்... பிறகு நடந்தது என்ன ?
அமெரிக்காவின் பென்சில்வானியா பகுதியில் கிளேட்டன் மற்றும் கேரி லா என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் சிசில் என்ற Pittsburgh வகை நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். இந்த நாய்க்கு தற்போது 7 வயதாகும் நிலையில், இதற்கு வீட்டில் நாய்வகை உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்த தம்பதி தங்களது வீட்டை கொஞ்சம் வேலை செய்ய எண்ணியுள்ளனர்.
அதன்படி வீட்டின் பணிகளுக்கு 4000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.32 லட்சம்) பணத்தை தங்கள் வீட்டில் வைத்திருந்தனர். இந்த நிலையில் திடீரென அந்த பணம் காணாமல் போயுள்ளது. இதனால் பதறிப்போன தம்பதி, வீட்டில் சுற்றிலும் தேடி அழைந்தனர். ஒரு கட்டத்தில் நாய் அந்த பணத்தை வாந்தி எடுத்ததையடுத்து அது சாப்பிட்டதை உணர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து அது மேலும் பணத்தை மெல்ல மெல்ல வாந்தி எடுத்தது. இதையடுத்து அதனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே நடந்ததை கூறிய பின்னர் நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நாய் வாயில் இருந்து வெளியே வந்த பணத்தாள்களை கழுவி சுத்தம் செய்து, காய வைத்து அதனை வங்கியில் கொடுத்து மாற்றியுள்ளனர் அந்த தம்பதி.
ஆனால் இன்னும் சில பணத்தாள்கள் வெளியே வரவில்லை என்பதால் நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிசில் என்ற நாய், கடந்த 7 வருடங்களாக இதுபோல் எதுவும் செய்யவில்லை என்றும், இதுவே முதல்முறை என்றும் தம்பதி வேதனையோடு தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!