உலகம்
கடும் வெயிலில் 104 கி.மீ ஓட்டம்... துபாயில் பெங்களூரு இளைஞர் செய்த செயலால் ஷாக் - காரணம் என்ன ?
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் கடும் வெப்பம், கடும் குளிர், வறட்சி உள்ளிட்ட பல விஷயங்களை பூமி சந்திக்க நேரிடும். இதனால் இங்கு வாழும் மனிதர்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு, வாழ முடியாத நிலை கூட வரும். எனவே இதுகுறித்து உலக நாடுகள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பல அமைப்புகள் முனைப்பு காட்டி வருகிறது.
அதோடு இதற்கு உலக நாடுகளும் கவலை கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 28-வது சர்வதேச காலநிலை மாற்ற நடவடிக்கை உச்சி மாநாடு (COP 28) கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்திற்கான நிதியுதவி, பூமியிலிருந்து கிடைக்கும் எரி பொருட்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த துபாயில் நடைபெற்ற இந்த மாநாடு, அங்கிருந்த பெங்களுருவை சேர்ந்த இளைஞருக்கு ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாரத்தான் மேற்கொள்ள திட்டமிட்டார்.
அதாவது பெங்களூருவை சேர்ந்தவர் ஆகாஷ் நம்பியார் (34). இவர் COP 28-ஆல் விழிப்புணர்வு ஏற்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாரத்தான் மேற்கொண்டார். துபாயில் அமைந்துள்ள பாம் ஜூமைரா, புர்ஜ் அல் அரப், கைட் கடற்கரை, ஜூமைரா கடற்கரை, எதிஹாத் மியூசியம் உள்ளிட்ட இடங்களை கடந்த இவர், அந்த நாட்டின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் தனது மாரத்தானை முடித்தார்.
சுமார் 104 கி.மீ வரை சுட்டெரிக்கும் வெயிலில் 17 மணி நேரம் 20 நிமிடங்களில் புர்ஜ் கலிஃபாவை அடைந்தார். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார். மேலும் அதில், சர்வதேச COP 28 மாநாடு துபாயில் முடிவடைந்த நிலையில், உலகம் 1.5 டிகிரி சென்டிகிரேட்டுக்கு வெப்பமயமாக இன்னும் 5 ஆண்டுகள்தான் இருக்கின்றன. ஆனால் யாருக்கும் அது குறித்து விழிப்புணர்வு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆகாஷ் இளைஞரின் இந்த முயற்சி பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்ததோடு பாராட்டுகளை குவித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் கூட 104 கி.மீ வரை ஓடி மக்களுக்கு வெப்பம் குறித்து பெங்களூருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விழுப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!