உலகம்
ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பயந்து ஓடிய மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் : நடந்தது என்ன ?
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.
இந்த போர் தொடங்கியகாலம் முதல் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை கொடுக்க அடிக்கடி உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். அந்த வகையில், தற்போது சுவிட்சர்லாந்து, லாத்வியா மற்றும் லிதுவேனியா நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்குச் சென்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின் பின்னர், அவர்கள் அனைவரும் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது திடீரென ஏவுகணை வீசப்பட்டால் ஒழிக்கும் எச்சரிக்கை மணி இடைவிடாமல் ஒலித்தது. இதனால் கடும் அச்சமடைந்த மேற்கூறிய தலைவர்களின் தலைவர்கள், அனைவரும் அந்த இடத்தில் இருந்து வேகவேகமாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஏவுகணை வேறொரு இடத்தை நோக்கி வீசப்பட்டது என்பதும், இந்த பகுதியில் தவறுதலாக எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது என்றும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தலைவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் இருந்து மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!