உலகம்
பாலஸ்தீனத்தில் மனித உரிமை மீறல்கள்: இஸ்ரேல் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் 5 நாடுகள் புகார் !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் முன்னெடுக்கும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என 5 நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளன. தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், பொலிவியா, கொமோரோஸ் மற்றும் ஜிபூட்டி ஆகிய நாடுகள் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளன.
இது குறித்து பேசிய தென்னாப்பிரிக்கா அதிகாரி, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகிறது இதனை குறித்து விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
Also Read
-
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
-
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
-
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
-
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
-
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !