உலகம்
வீடியோவில் துப்பாக்கியை நீட்டிய காதலன்: சிரித்துக்கொண்டிருந்த காதலி - இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
பிரேசிலின் தென்மேற்கு பகுதியான கோயாஸ் பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞரும், 23 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் அந்த காதல் ஜோடி நின்றுகொண்டிருந்துள்ளது. அப்போது, காதலி காதலனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வீடியோவில் காதலன் திடீரென ஒரு துப்பாக்கியை எடுத்து காதலியை நோக்கி நீட்டியுள்ளார்.
காதலன் தன்னிடம் விளையாடுகிறார் என்று நினைத்த அந்த காதலியும் சிரித்துக்கொண்டிருந்த நிலையில், திடிரென அந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டுகள் காதலியின் உடலில் பாய்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் காதலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து காதலர் காவல்நிலையத்துக்கு தொடர்பு கொண்டு தான் தனது காதலியை சுட்டுக்கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் அந்த காதலனை கைது செய்தனர். இதனிடையே இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இளம்பெண் சுட்டுக்கொள்ளப்படும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!