உலகம்
செயற்கை நுண்ணறிவு தொற்று நோய் அணு ஆயுதத்தைப் போல ஆபத்தானது - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை !
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் Artificial Inteligence-ஐ பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமீபத்திய ஆண்டுகளில் பல மடங்கு முன்னேறியுள்ளது, தற்போதைய நிலையில், செயற்கை நுண்ணறிவு செயலிகள் பல மடங்கு பெருகியுள்ளன. Artificial Inteligence செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்தையும் இதனால்செய்ய முடியும்.
செயற்கை நுண்ணறிவு செயலிகளின் வளர்ச்சி குறித்து பேசிய செயற்கை நுண்ணறிவின் தந்தையாகக் கருதப்படும் ஜெஃப்ரி ஹின்டன், "செயற்கை நுண்ணறி தற்போதைய நிலையில் மனிதர்களை விட புத்திசாலிகளாக இல்லாவிட்டாலும், விரைவில் அவை நம்மை விட புத்திசாலிகளாக மாறும்"என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், சர்வதேச தலைவர்கள் பங்கேற்ற கருத்தரங்கு ஒன்றில் Artificial Inteligence கருவிகளை எப்படி ஒழுங்குபடுத்தலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், "Artificial Inteligence தொழில்நுட்பத்தை ம்படுத்துவது குறித்து ஒரே சட்ட திட்டங்களைக் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் கனடா நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை. வரும் காலத்தில் இவை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்து மிக மோசமாக இருக்கலாம்.
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவால் நமக்கு மிகப் பெரிய ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அவை தொற்று நோய் அல்லது அணு ஆயுதத்தைப் போல மனிதக் குலத்திற்கே அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, நிலமை கைமீறி செல்வதற்கு முன்னர் நாம் முன்கூட்டியே இந்த விவகாரத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!
-
திராவிட மாடலில் உழவர்கள் பெற்ற நலன்! : வேளாண் திட்டங்களை பட்டியலிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
-
112 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு : ஒன்றிய அரசின் அதிர்ச்சி தகவல்!
-
பீகார் தேர்தல் : இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் யார்? - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
-
“பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்” -சேந்தமங்கலம் திமுக MLA மறைவுக்கு முதல்வர் இரங்கல்!