உலகம்
அடுத்தடுத்து பாய்ந்த 5 ஆயிரம் ராக்கெட்டுகள்: இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்.. மீண்டும் தொடங்கிய போர் !
பாலஸ்தீனத்தில் உள்ள போராளி அமைப்புக்களுக்கும், இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாலஸ்தீனத்தில் இருக்கும் காசா பகுதியில் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி பெரும் சண்டை நடந்து வருகிறது.
பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த மோதல் தற்போது மீண்டும் வெடித்துள்ளது. இன்று காலை பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வலுவுடன் இருக்கும் ஹமாஸ் என்ற அமைப்பு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர், தெற்கு மற்றும் மத்திய பகுதியில் தங்களது தாக்குதலை மேற்கொண்டுள்ளது. 20 நிமிடங்களில் சுமார் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் ஏவப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் போர் பதற்றம் நிலவியுள்ளது. மேலும் ஹமாஸ் படையினர், இஸ்ரேலுக்குள் ஆயுதத்துடன் அத்துமீறி ஊடுருவியுள்ளதாகவும் அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 'யூத சப்பாத்' என்ற முக்கியமான நாளையொட்டி இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த சூழலில் இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நாட்டினர் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் பிரகடனத்தை அறிவித்துள்ளனர். இதனால் காசா பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு 'Operation Iron Swords' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த போர் பதற்றத்தையொட்டி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த போர் தாக்குதலில் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் படுகாயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் 2 நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!