உலகம்
முதலையின் வாயில் இருந்த பெண்ணின் தலை.. அதிர்ந்த அமெரிக்கா.. சிக்கிய 13 அடி முதலை.. நடந்தது என்ன ?
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்துக்குட்பட்ட லார்கோ என்னும் இடத்தில் வசித்து வந்தவர் 41 வயதான ப்ரினா பெக்காமின். இவரின் வீட்டுக்கு அருகில் கால்வாய் ஒன்று இருந்துள்ளது. இங்கு ஏராளமான முதலைகளும் வசித்து வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னாள் இந்த கால்வாயில் இருந்த பெரிய முதலையின் வாயில் பெண்ணின் தலை பகுதி மட்டும் இருந்துள்ளது. இதனைக் கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன்படி போலிஸார் வந்து பார்த்தபோது அந்த கால்வாயில் சடலம் ஒன்றும் இருந்துள்ளது. அதனை எடுத்து பரிசோதனை செய்ததில் அந்த சடலம் ப்ரினா பெக்காமினுடையது என்பது உறுதியானது. இதனிடையே மனிதனை கொலை செய்த முதலையை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அடித்து கொலை செய்துள்ளனர்.
கொலைசெய்யப்பட்ட அந்த முதலையை அங்கிருந்தவர்கள் கால்வாயில் இருந்து வெளியே எடுத்தபோது அதனை காண ஏராளமானோர் கூடியுள்ளனர். இதுக் குறித்துப் பேசிய இறந்துபோன பெண்ணின் மகள், எனது தாய் இரவு நேரத்தில் கால்வாய் அருகே சென்றபோது இந்த கொடூர சம்பவம் நடந்ததாக கூறியுள்ளார்.
மேலும், அந்த பகுதியில் நான்கு அல்லது ஐந்து அடி நீள முதலைகள் இருந்ததாகவும், ஆனால், இந்த கொடூர செயலை செய்த முதலை 12 அடிக்கும் அதிக நீளத்தில் இருந்தாகவும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!