உலகம்
செய்யாத குற்றம்.. 47 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட 72 வயது முதியவர்.. பின்னணி என்ன ?
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் அமைந்துள்ளது கிரீன்பர்க். இங்கு கடந்த 1975-ம் ஆண்டு பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து அவரது குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த அந்நாட்டு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டது. அப்போது லியோனார்ட் மேக் என்ற கறுப்பினத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தது.
அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தான்தான் குற்றத்தை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். அந்த காலத்தில் DNA சோதனை என்பது சாத்தியமில்லை என்பதால், குற்றத்தை ஒப்புக்கொண்ட லியோனார்ட் மேக்கை மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆர்ஜ்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் நீண்ட வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அதாவது அமெரிக்காவில் 'innocence' என்ற சட்டம் மூலம் சிறையில் நீண்ட வருடங்களாக அடைக்கப்பட்டிருப்பவர்கள் உண்மையில் குற்றவாளிகளா என்று கண்டறியப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாலியல் குற்றவாளி என்று சிறை தண்டனை அனுபவித்து வந்த லியோனர்ட் மேக்கிற்கு டி.என்.ஏ.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அந்த குற்றத்தை இவர் செய்யவில்லை என்று நிரூபணம் ஆனது. இதையடுத்தே அவர் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்டு சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 72 வயதில் லியோனர்ட் மேக் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கும் லியோனர்ட் மேக், தான் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாகவும், சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் தேசிய விடுதலை என்ற அமைப்பு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், "மொத்த அமெரிக்க மக்கள்தொகையில் கறுப்பின மக்கள் 13.6 % மட்டுமே என்றாலும், 1989 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் தண்டனைகள் ரத்து செய்யப்பட்ட 3,300 பேரில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் கறுப்பின மக்கள் ஆவர்." என்று குறிப்பிட்டுள்ளது.
அதோடு 1989-ம் ஆண்டு புதிய DNA பரிசோதனையின் அடிப்படையில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 575 கைதிகள், குற்றமற்றவர்களாக தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 35 பேர் மரண தண்டனைக்காகக் காத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!